Friday 3rd of May 2024 05:56:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் - அமைச்சர் டக்ளஸ்!

இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் - அமைச்சர் டக்ளஸ்!


நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

சீன நிறுவனத்திற்கு பூநகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைஅனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில் நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கெளதாரி முனையில் காணியற்ற குடும்பங்களுக்கு பயிற்சியை காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE